Home » செய்திகள் » ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 போட்டி – ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்திய அணி?

ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 போட்டி – ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்திய அணி?

ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 போட்டி - ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்திய அணி?

India Vs Zimbabwe: ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 போட்டி: T20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4வது டி20 போட்டி இன்று மாலை ஹராரேவில் நடக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இந்த போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் நோக்கத்தில் இந்திய அணி முனைப்புடன் இருந்து வருகிறது. அதே போல் அதே சமயம் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே இருந்து வருகிறது.

Also Read: பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் – என்ன காரணம் தெரியுமா?

அப்படி ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் 2-2 என சமநிலைக்கு கொண்டு வருவதுடன், தொடரை வெல்வதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே இன்று நடக்க இருக்கும் போட்டி தான் வெற்றி யாருக்கு என்பதை வழிவகுக்கும். எனவே பொறுத்து இருந்து பார்க்கலாம் இன்று என்ன நடக்கிறது என்று. india – zimbabwe – cricket news

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top