இந்தியன் 2 "பாரா" பாடல் வெளியானது - அனிருத்தின் தரமான சம்பவம் பார்க்க போறீங்க?இந்தியன் 2 "பாரா" பாடல் வெளியானது - அனிருத்தின் தரமான சம்பவம் பார்க்க போறீங்க?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றி கொண்டாடி வரும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன். எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் அவரின் அற்புதமான நடிப்பை பார்த்து மயங்காத ஆட்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். 28 வருடங்களுக்கு பிறகு முன்பு வெளியான இந்தியன் படத்தின் பார்ட் 2 தான் தற்போது வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படம்.

இப்படத்தில் அவருடன் சேர்ந்து ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனாலே படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.மேலும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் தற்போது பாரா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பாடலின் மூலம் அனிருத் மீண்டு கம்பேக் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.   இந்தியன் 2 “பாரா” பாடல் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *