Bird Flu case: இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இப்பொழுது தான் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது மீண்டும் அரிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தை ‘வியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2)’ என்ற வைரஸால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பு முதலில் கடந்த 2019ம் ஆண்டு ஒருவருக்கு ஏற்பட்டது. தற்போது 4 வயது குழந்தைக்கு 2வது தடவை ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” 4 வயது குழந்தைக்கு கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில் எச்9என்2 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 3 மாதங்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் இந்த பாதிப்பு கோழிப் பண்ணையில் இருந்து தான் குழந்தைக்கு தாக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அக்குழந்தையின் குடும்பத்தினருக்கு எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை. அதுமட்டுமின்றி இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது அல்ல என கூறப்படுகிறது.
அம்மு அபிராமியின் காதலனை பார்த்துள்ளீர்களா? நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளே!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
முதல்வர் கூறிய 5 முக்கிய உரைகள்
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு?
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
பொறியியல் மாணவர் சேர்க்கை 2024