இந்தியக் காகங்களால் கென்யா பறவைகளுக்கு அச்சுறுத்தல் - ஆய்வாளர்கள் தகவல் !இந்தியக் காகங்களால் கென்யா பறவைகளுக்கு அச்சுறுத்தல் - ஆய்வாளர்கள் தகவல் !

இந்தியக் காகங்களால் கென்யா பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 200 காகங்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். indian crows threaten native kenyan birds – govt decided to eliminate

கென்யா அரசு அங்குள்ள காகங்கள் அனைத்தையும் கொல்ல திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தாண்டு இறுதிக்குள் அங்குள்ள சுமார் ஒரு கோடி காகங்களைக் கொல்ல கென்யா அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட காகங்களை மட்டும் குறிவைத்துக் கொல்லப்படுகின்றன.

இந்திய காகங்களால் கென்யா நாட்டில் உள்ள பறவைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பறவைகளின் கூடுகள், முட்டைகள், குஞ்சுகளை காகங்கள் தாக்கி அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 1891 ம் ஆண்டு கென்யாவுக்கு கொம்டுவரப்பட்ட இந்திய காகங்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர் – மருத்துவர்கள் அதிர்ச்சி !

காகங்களால் உள்ளூர் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அடுத்து ஸ்டார்லிக்ஸைடு என்ற ரசாயனத்தை பயன்படுத்தி காகங்களை கட்டுப்படுத்த கென்யா அரசு நடவடிக்கை மேற்கொடுள்ளது. அத்துடன் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 200 காகங்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *