ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம். தற்போது 96 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் சினிமாவில் பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படம் To Kill a Tiger ஆஸ்கர் விருதை இழந்துள்ளது. உக்ரைன் மொழியில் இடம்பெற்ற ஆவணப்படதிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் பல முக்கிய பிரபலங்கள் முதல்முறை விருதினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

96 வது ஆஸ்கர் விருதுக்கான ஆவணப்படப்பிரிவில் இந்திய சார்பில் பரிந்துரைக்கப்பட்ட To Kill a Tiger ஆவணப்படம் விருதினை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது 13 வயது மகளுக்காக போராடும் தந்தை குறித்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்ட நிலையில் நிச்சயமாக ஆஸ்கர் விருதை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விருதை இழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த விருதை ’20 டேஸ் இன் மரியுபோல்’ என்ற உக்ரைன் மொழி ஆவணப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2024 ஆஸ்கர் விருதுகள்.., ஏழு விருதுகளை தட்டி தூக்கி சாதனை படைத்த பிரபல திரைப்படம் – முழு லிஸ்ட் இதோ!!

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ஓபன்ஹெய்ம்ர் படத்திற்க்காக கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார். மேலும் மொமெண்ட்டோ, இன்செப்ஷன், டன்கிரிக் போன்ற படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு இதுவரை பரிந்துரைக்கப்பட்ட இவர் தற்போது முதல் முறையாக விருதினை வென்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதினை ராபர்ட் டவுனி பெற்றுள்ளார். இது இவருடைய முதல் ஆஸ்கர் விருதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *