மக்களவை தேர்தல் 2024 - சாக்கடையில் வீசப்பட்ட EVM மிஷின்… மேற்கு வங்கத்தில் வன்முறை வெடிப்பு!மக்களவை தேர்தல் 2024 - சாக்கடையில் வீசப்பட்ட EVM மிஷின்… மேற்கு வங்கத்தில் வன்முறை வெடிப்பு!

மக்களவை தேர்தல் 2024 – சாக்கடையில் வீசப்பட்ட EVM மிஷின்: 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசி கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது மேற்கு வங்காளம், பீகார்,  ஒடிசா, பஞ்சாப்,  உத்தரப் பிரதேசம்,   இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவில் வன்முறை அரங்கேறியுள்ளது.

குறிப்பாக பங்கர் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடி 40,  41ல் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒரு கால்வாயில் சிலர் வீசியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களால் தான் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.  இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை.  இருப்பு வைக்கப்பட்டிருந்த ரிசர்வ் இஎவிஎம் இயந்திரங்கள் தான் தண்ணீரில் வீசப்பட்டன என்று தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் 2024 – சாக்கடையில் வீசப்பட்ட EVM மிஷின் – lok sabha election 2024 – indian election 2024 – tamilnadu news – election news

VJ சித்து மீது பரபரப்பு புகார்.. எதற்கு தெரியுமா? காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *