உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - ஆகஸ்ட் 23ம் தேதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு !உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - ஆகஸ்ட் 23ம் தேதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு !

ரஷ்யாவுடனான போரை தொடர்ந்து உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தத்க்கது.

தற்போது இந்தியாவில் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைத்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றார்.

அந்த வகையில் ரஷிய பயணமானது ஆட்சி பொறுப்பேற்ற பின் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் அப்பயணம் சர்வதேச கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. Indian Prime Minister Narendra Modi to visit Ukraine

மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்டில் விருதினை ரஷிய அதிபர் புதின் வழங்கினார்.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தன் எக்ஸ் பக்கத்தில்,

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலை குறிப்பிட்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் போர் குற்றவாளியை சந்தித்திருப்பது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமும் பேரழிவு தரும் அடியுமாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் – ITR காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை அதிகாரிகள் விளக்கம்

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார்.Ukraine President Volodymyr Zelensky

இதற்க்கு முன் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்,

இரு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *