முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர் குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் ரயில் பெட்டி
பொதுவாக மக்கள் தாங்கள் செல்ல நினைக்கும் இடங்களுக்கு மிக குறைந்த விலையில் வேகமாக செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் சேவை என்றால் ரயில் வசதி தான். இந்த ரயில் வசதி மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த ரயில் முன்பதிவு செய்யப்பட்டது, படாதது என்று இரு பெட்டி-களாக தான் இயங்கி வருகின்றனர். சமீப காலமாக புக்கிங் ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நபர் ஒருவர் ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சரை டேக் செய்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், ” இது மாதிரியான புகார்களை தெரிவிக்க 139 என்ற எண்ணிற்கு டயல் செய்து தெரிவிக்கலாம். இல்லையென்றால் ரயில் மதாத் என்ற இணையதளத்தில் இது குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.