ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம்: பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைக்கும் இடத்திற்கு செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். அப்படி மக்களின் முதல் சாய்ஸாக இருந்து வரும் ரயிலில் பல வித வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிய விதிமுறை ஒன்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது மக்கள் ரயில் பயணத்தில் முன்பதிவு செய்யும் பெரும்பாலான பயணிகள் லோயர் பெர்த் அல்லது சைடு லோயர் பெர்த் இருக்கையில் அமர தான் ஆசைப்படுவார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் அது சிலருக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் லோயர் பெர்த் எந்த பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். அதே போல் ஸ்லீப்பர் வகுப்பில் 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இரண்டு டயர் மற்றும் மூன்று டயர் ஏசி பெட்டிகளில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்படும். மேலும் லோயர் பெர்த் இருக்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில் இனி இந்த பயணிகளுக்கு லோயர் பர்த் கன்பார்ம்