தற்போது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ரயிலும் சுமார் ரூ.80 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும். Indian Railways to begin first hydrogen train in trial run Dec 2024
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஹைட்ரஜன் ரயில் :
தற்போது ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனா போன்ற நாடுகளில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த வரிசையில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. மேலும் சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஒருங்கிணைக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. India’s first hydrogen train project – trial run in December
ரூ.80 கோடி செலவு :
இதனையடுத்து இந்திய அரசின் ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹெரிடேஜ் ரயில்களை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ரயிலும் சுமார் ரூ.80 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.
அத்துடன் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க சுமார் ரூ.70 கோடி செலவிடப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் :
இந்நிலையில் வடக்கு ரயில்வேயின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இந்த ஹைட்ரஜன் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஹரியானாவின் ஜிந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள 1 மெகாவாட் பாலிமர் எலக்ட்ரேலைட் மெம்பரேன் எலக்ட்ரோலைசர் ஹைட்ரஜன் ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜனை வழங்கும். hydrogen train in trial run Dec 2024
மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி – போக்குவரத்தில் அதிரடி மாற்றம்
மேலும் இந்த எரிபொருள் நிரப்பும் மையத்தில் இருந்து சுமார் 3,000 கிலோ ஹைட்ரஜனை சேமித்து வைக்க முடியும்.
அதன் காரணமாக இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.