இந்திய ரூபாய் நோட்டில் காந்திக்கு முன்னாடி யார் புகைப்படம் இருந்தது தெரியுமா?பொதுவாக எல்லா நாட்டிலும் புழக்கத்தில் இருந்து வரும் ரூபாய் நோட்டுகளில் தேச தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் புகைப்படங்கள் தான் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் நம் இந்திய ரூபாய் நோட்டில் நம் நாட்டுக்காக பாடுபட்டு விடுதலை வாங்கி கொடுத்த தேசத்தந்தை காந்தியின் புகைப்படம் தான் கிட்டத்தட்ட 50 வருஷமாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு முன்பு ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் என்பது குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்படி யாருடைய புகைப்படங்கள் இருந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 1917ம் ஆண்டு இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, 5ம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்துடன் தான் அச்சிடப்பட்டது. அதன்பிறகு இந்தியா விடுதலையான பிறகு அசோகர் தூணுடன் இருக்கும் ரூபாய் நோட்டுகள் வெளியானது. மேலும் கடந்த 1961 வரை கோவாவில் எஸ்குடோ கரன்சி தான் புழக்கத்தில் இருந்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார்… நிவாரணம் வழங்காத நீதிமன்றம்!!
இந்த நாணயத்தில் 2ம் ஜான் மன்னரின் போட்டோ இருந்தது. 1964க்குப் பிறகு புதுச்சேரியில் பிரான்ஸ் அரசு வெளியிட்ட நோட்டுகளும் ரூபாய் என்று அழைக்கப்பட்டன. அதன்பிறகு 1966ல் தான் காந்தியின் புகைப்படத்துடன் கூடிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அச்சடிக்கப்பட்ட காந்தியின் புகைப்படம் பிரிட்டிஷ் அரசியல்வாதி பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ் என்பவருடன் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. indian rupees – indian currency
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
VJ சித்து மீது பரபரப்பு புகார்
அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை