
நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சர்வதேச பெருமை பெற்ற பெங்களுருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய நிலையில், நீரை வீணாக்குவதை தடுக்க அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பெங்களுர் மட்டுமின்றி இந்தியாவின் இன்னும் சில பகுதிகளில் இந்த அவல நிலை ஏற்பட இருக்கிறது. குறிப்பாக இதில் சென்னையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட போகும் 3 நகரங்களை காணலாம்.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சென்னை:
பொதுவாக குடிக்க தண்ணீர் இல்லாமல் அல்லோல்படும் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் சென்னை இருக்கிறது. குறிப்பாக தினசரி மக்கள் சுமார் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை போக்குவரத்து மூலம் பெற்று கொள்கின்றனர். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்று கூறுகின்றனர்.
டெல்லி
இந்தியாவின் தலைநகரமாக இருக்கும் டெல்லியில் கோடை காலம் வந்துவிட்டால் போது, தண்ணீர் பஞ்சம் தலை தூக்க ஆரம்பித்து விடும். அதுமட்டுமின்றி அங்கு காற்று மாசுபாடு அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீரின் தரம் இல்லாததால் மக்கள் அவதி படுகிறார்கள்.
2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இனி பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை.., தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
மும்பை:
அங்கு வாழும் மக்களின் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், நீர் ஆதாரங்கள் குறைவாக இருப்பதாலும் கண்டிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் மக்கள் தண்ணீர் இல்லாமல் பித்து பிடித்து திரிய போகிறார்கள் என சொல்லப்படுகிறது.