Home » செய்திகள் » 2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் – வெளியான முக்கிய அறிவிப்பு !

2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் – வெளியான முக்கிய அறிவிப்பு !

2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு !

தற்போது 2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் ஈரான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை ரஷ்யா விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவும் இப்பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இ-விசா வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த விசா விண்ணப்பித்த 4 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுற்றுலாவை அதிகரிக்க விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் இந்தியா மற்றும் ரஷ்யா அதிகாரிகள் ஆலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு 60,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாஸ்கோவிற்கு பயணம் செய்கிறார்கள். மேலும் இது 2022 உடன் ஒப்பிடும்போது 26% அதிகரிப்பாகும்.

இதற்க்கு முன்பு 2023 ஆகஸ்ட் முதல் சீனா மற்றும் ஈரான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை ரஷ்யா விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறது. இதனையடுத்து தற்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top