இந்தோனேசியாவுக்கு அருகில் இருக்கும் தீவு தான் பப்புவா நியூ கினியா. இந்த தீவில் பெரும்பாலானோர் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் சிகின் மற்றும் கேகின் என இரு பிரிவின பழங்குடியினராக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி அவர்களுக்குள்ள கடும் மோதல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நிலத்தகராறு காரணமாக இரு பிரிவினரும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரையும் சேர்ந்து கிட்டத்தட்ட 64 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதை தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்னவென்றால், இருதரப்பினரும் முதலில் துப்பாக்கி சூடு நடத்தி தான் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, “பப்புவா நியூ கினியாவில் நடந்த சம்பவம் பெரும் கவலை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.