இந்தோனேஷியாவில் தனது குழந்தைகளுக்கு மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு, இதனையடுத்து அந்த பெண்ணை மீட்க எவ்வளவு போராடியும் பலனளிக்காததால் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு
இந்தோனேஷியா :
இந்தோனேஷியாவில் குழந்தைகளுக்கு மருந்து வாங்க வீட்டை விட்டு வெளியே சென்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு :
சம்பவத்தன்று குழந்தைகளுக்கு மருந்து வாங்க அங்குள்ள வனப்பகுதியை கடந்து சென்றுதான் மருந்து வாங்க முடியும் என்பதால் காட்டுப்பாதை வழியாக அந்த பெண் நடந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து மருந்து வாங்க சென்ற மனைவி நீண்ட நேரம் வீடு திரும்பாத காரணத்தால் அந்த பெண்ணின் கணவர் காட்டுக்குள் தேடி அலைந்து கொண்டிருந்த போது அங்கு மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் இருப்பதையும், அந்த பாம்பின் வாயில் தனது மனைவியின் கால்கள் மட்டும் இருக்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !
அதன் பின்னர் தனது மனைவியை காப்பாற்ற கத்தியால் பாம்பை வெட்டி மீட்க முயற்சி செய்த போதும், காலதாமதம் ஏற்பட்டதால் அந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.