Home » சினிமா » வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாக இருந்த வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Actor Vikram:

விக்ரம் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்.யு. அருண்குமார் தான் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சர்மூடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

அப்போது பேசிய இயக்குனர், வீர தீர சூரன் திரைப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது என்று கூறினார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் ஒரே இரவில் நடக்கும் கதையை தான் வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். எனவே வீர தீர சூரன் பார்ட் 2 படமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விக்ரமின் வீர தீர சூரன் பார்ட் 2 படம் ரம்ஜான் விடுமுறையை ஒட்டி மார்ச் 27ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதாவது B4U என்கிற நிறுவனம் தொடர்ந்த வழக்கு காரணமாக தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இப்படம் திரைக்கு வரவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!

ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!

சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top