உலக மகளிர் தினம் 2024. இந்தியா உள்பட சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுதும் கொண்டாடப்படும் நாள் தான் மார்ச் 8. ஆனால் எதற்காக இந்த நாளில் மகளிர் தினம் கொண்டப்படுகிறது என்பது பலரும் அறியாத ஒன்று. இந்த மகளிர் தினம் ஆரம்பிக்கப்பட்டதே ஒரு போராட்டத்தில் தான். இது குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
உலக மகளிர் தினம் 2024
1908 ம் வருடம் மார்ச் 8 ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உழைக்கும் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். தங்களது வேலை நேரத்தை குறைக்கவும், ஊதியத்தை உயர்த்தி வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் இந்த பேரணி நடத்தப்பட்டது. இதில் சுமார் 15000 மகளிர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாபெரும் பேரணி நடந்த நாளை தான் தேசிய மகளிர் தினமாக அறிவித்தது அமெரிக்க சோசியலிஸ்ட் கட்சி. அதன்படி 1909 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இந்த தினத்தை பெண்கள் தினமாக கொண்டாடுகின்றனர்.
பின்னர் 1910 ல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் சர்வதேச உழைக்கும் பெண்களுக்கான மாநாடு நடைபெற்றது. அதில் 100 பெண்களுக்கு மேல் பங்கு பெற்றனர். அவர்கள் அனைவரும் 17 நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மாநாட்டில் தான் மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுதும் கொண்டாட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார் கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணி.
அதனை தொடர்ந்து பிற நாடுகளை சேர்ந்த பெண்களும் இதை கொண்டாடினர். அதனை அடிப்படையாக கொண்டே கடந்த 2011 ம் ஆண்டு நூறாவது மகளிர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது.
இவ்வளவு ஆடம்பர கொண்டாட்டம் தேவையா ? பிரபலங்கள் யாருக்கும் வெட்கமே இல்லையா – அம்பானி வீட்டு திருமணத்தை விமர்சித்த பிரசாந்த் பூஷன் !
ஐ. நா சபையில் இந்த சர்வதேச மகளிர் தினமானது 1975 ம் ஆண்டில் தான் முறைப்படி அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. மேலும் ஒவ்வோர் ஆண்டு மகளிரை தினத்தன்றும் பெண்களுக்கான ஒரு முழக்கத்தை முன்வைக்கிறது ஐ. நா சபை.
இந்த 21 ம் நூற்றாண்டில் பெண்கள் கல்வியறிவு மிக்கவர்களாக வளர்ந்து வந்துள்ளனர். அந்த கல்வியறிவு அவர்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பல பிரிவுகளில் முன்னேற்றம் அடைய செய்துள்ளது. ஒவ்வொரு வருடம் வரும் மார்ச் 8 ஆனது பெண்கள் இன்னும் தாங்கள் சாதிக்க
வேண்டியவற்றையும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நினைவு படுத்தும் நாளாக அமைந்திருக்கிறது.
ரஸ்யா உள்ளான பல நாடுகளில் மகளிர் தினமானது தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நாளில் பூக்கள் விற்பனையானது இருமடங்காக இருக்குமாம். சீனாவில் மகளிர் தினத்தன்று அரை நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் இந்த மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா பெண்களின் சாதனையை கவுரவப்படுத்தி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார்.
வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி பெண்களின் பங்கு சரிபாதியாக உள்ளது. தற்போது பெண்களின் அடிமைத்தனம் ஒழிந்து பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற்றம் அடைந்து விட்டனர். அந்த வெற்றியை கொண்டாடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ” உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்”