Home » செய்திகள் » டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் - ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஆவின் நிர்வாகம் வருகிற டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆவின் நிறுவனம்:

தமிழ்நாடு அரசின் கண்காணிப்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில் , தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை நம்பி பல கோடி மக்கள் இருக்கின்றனர். அதன்படி, குறைந்த விலையில் சத்தான மற்றும் தரமான பாலை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.

நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உப பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய வகையான ஆவின் பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் பிளஸ் பால் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஒன்றியங்களில் வருகிற டிசம்பர் 18ம் தேதி முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முழு விவரம் இதோ !

தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!

PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top