IOB வங்கி SNEHA வேலைவாய்ப்பு 2023. Indian Overseas Bank சார்பில் ” SNEHA” அறக்கட்டளை இயங்கி வருகின்றது. இவைகள் 14 கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளை நடத்தி வருகின்றது. அதன்படி திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் ஆசிரியர் , உதவியாளர் மற்றும் கையாள பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
IOB வங்கி SNEHA வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
IOB வங்கியின் சார்பில் இயங்கி வரும் ” SNEHA”அறக்கட்டளையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. ஆசிரியர் ( Faculty )
2. Office Assistant
3. Attender ( கையாள் ) போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக IOB வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. ஆசிரியர் – 1
2. அலுவலக உதவியாளர் – 3
3. கையாள் – 1 என மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் இருப்பதால் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
1. ஆசிரியர் :
கிராமப்புற மேம்பாடு , சமூகவியல் , உளவியல் கால்நடை , தோட்டக்கலை போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டத்துடன் B.Ed முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. அலுவலக உதவியாளர் :
ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் MS Office ( Word , Excel ) , Tally , Internet ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
3. கையாள் :
மெட்ரிகுலேட் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தகுதிகள் :
1. உள்ளூர் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. இந்தி மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC கணக்கு அலுவலர் வேலைவாய்ப்பு 2023 ! 52 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயதுத்தகுதி :
22 வயது முதல் 40 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
1. ஆசிரியர் – ரூ. 20,000
2. அலுவலக உதவியாளர் – ரூ. 12,000
3. கையாள் – ரூ. 8,000 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
28.11.2023ம் தேதிக்குள் ” SNEHA”அறக்கட்டளையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட IOB வங்கியின் கீழ் செயல்படும் ” SNEHA”அறக்கட்டளை காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
1. திருநெல்வேலி :
RSETI திருநெல்வேலி ,
A – 63 ,
5வது குறுக்கு தெரு ( முதல் தளம் ) ,
மகாராஜா நகர் காலனி ,
திருநெல்வேலி – 627011 ,
தமிழ்நாடு .
மின்னஞ்சல் முகவரி : lobrseti.tirunelveli@gmail.com
2. தென்காசி :
RSETI தென்காசி ,
பிளாட் எண் – 1 ,
கதவு எண் . 2/10/59 ,
ஹைலேண்ட் சிட்டி ,
இலத்தூர் முதல் தென்காசி சாலை ,
தென்காசி – 627803 ,
தமிழ்நாடு .
மின்னஞ்சல் முகவரி : rsetitenkasi@gmail.com
விண்ணப்பக்கட்டணம் :
ரூ. 200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி IOB வங்கியின் கீழ் இயங்கி வரும் ” SNEHA”அறக்கட்டளை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையானவை :
1. 10ம் வகுப்பு சான்றிதழ்
2. 12ம் வகுப்பு சான்றிதழ்
3. கல்லூரி சான்றிதழ்
4. சாதி சான்றிதழ்
5. அனுபவ சான்றிதழ்
6. கணினி அறிவு சான்றிதழ்
தேர்ந்தெடுக்கும் முறை :
1. ஆசிரியர் – எழுத்து தேர்வு முதலில் நடத்தப்படும். பின்னர் நேர்காணல் நடைபெறும்.
2. அலுவலக உதவியாளர் – எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. கையாள் – நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.