IOB வங்கி வேலைவாய்ப்பு 2023. Indian Overseas Bank 1937 முதல் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு மக்களுக்கு பல்வேறு விதமான வங்கி சேவையை வழங்கி வருகின்றது. அதன்படி இந்த வங்கியில் பல்வேறு விதங்களில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
IOB வங்கி வேலைவாய்ப்பு 2023 ! 66 காலிப்பணியிடங்கள் ! ரூ. 89,890 வரை மாத ஊதியம் !
IOB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
நிறுவனத்தின் பெயர் :
IOB – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
பல்வேறு சிறப்பு அதிகாரிகள் ( Specialist Officers ) பணியிடங்கள் IOB வங்கியில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
66 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. மேலாளர் ( சட்டம் ) – 8
2. மூத்த மேலாளர் ( சட்டம் ) – 2
3. மேலாளர் ( IS தணிக்கை ) – 3
4. மூத்த மேலாளர் ( IS தணிக்கை ) – 2
5. மேலாளர் ( பாதுகாப்பு ) – 3
6. தலைமை மேலாளர் ( ஆபத்து ) – 2
7. மேலாளர் ( சிவில் ) – 2
8. மேலாளர் ( கட்டிட வடிவமைப்பாளர் ) – 2
9. மேலாளர் ( மின்சாரம் ) – 2
10. மேலாளர் ( கருவூலம் ) – 2
11. மேலாளர் ( கடன் ) – 20
12. மேலாளர் ( சந்தைப்படுத்துதல் ) – 5
13. மேலாளர் ( மனித வளங்கள் ) – 2
14. மூத்த மேலாளர் ( மனித வளங்கள் ) – 1
15. மேலாளர் ( முழு அடுக்கு டெவலப்பர் ) – 2
16. மேலாளர் ( Finacle Customization ) – 1
17. மேலாளர் ( DB நிர்வாகி / OS நிர்வாகி ) – 2
18. மேலாளர் ( தகவல் மைய நிர்வாகி ) – 1
19. மேலாளர் ( சோதனை , டிஜிட்டல் சான்றிதழ் ) – 1
20. மேலாளர் ( IB , MB , UPI , IOB PAY – டிஜிட்டல் வங்கி ) – 1
21. மேலாளர் ( டிஜிட்டல் வங்கி RTGS & NEFT ) – 1
22. மேலாளர் ( DCMS , Debit Card – டிஜிட்டல் வங்கி ) – 1
கல்வித்தகுதி :
மேற்கண்ட சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு ஏற்ற டிகிரி படிப்பை அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும். ( Law , BE , B.Tech , MBA , MCA , CA / CMA / CFA , M.Sc )
Indian Bank வேலைவாய்ப்பு 2023 ! பேங்க் வேலைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திங்களா !
வயதுத்தகுதி :
24 முதல் 40 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் IOB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வரு பதவிக்கும் வயதுத் தகுதியானது மாறுபடும்.
வயதுத் தளர்வு :
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்கள் – 5 ஆண்டுகள்
2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 3 ஆண்டுகள்
3. Benchmark குறைபாடுடைய நபர்கள் – 10 ஆண்டுகள்
4. 1984ல் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் – 5 ஆண்டுகள்
5. முன்னாள் ராணுவத்தினர் – 5 ஆண்டுகள்
சம்பளம் :
IOB வங்கியில் காலியாக இருக்கும் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ. 48,170 முதல் 89,890 வரையில் மாத ஊதியமாக அரசின் வழிமுறைகளின் படி வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
06.11.2023 முதல் 19.11.2023 வரையில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். IOB வங்கி வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் மூலம் IOB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. பொதுப்பிரிவினர் – ரூ. 850
2. SC / ST / PWD பிரிவினர் – ரூ. 175 என்று IOBவங்கியின் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. கையொப்பம்
3. பிறப்பு சான்றிதழ்
4. பள்ளி , கல்லூரி சான்றிதழ்
5. சாதி சான்றிதழ்
6. அனுபவ சான்றிதழ்
7. தடையில்லாச் சான்றிதழ்
தேர்ந்தெடுக்கும் முறை :
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கும் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர்.
1. ஆன்லைன் எழுத்து தேர்வு
2. நேர்காணல்
தேர்வு மையங்கள் :
1. சென்னை
2. மும்பை
3. கல்கத்தா
4. புது டெல்லி
5. பெங்களூர்
6. ஹைதராபாத்