ஐபிஎல் 18ல் 13 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி: 18வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். அதன்படி முதல் நாள் ஏலத்தில் 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 72 வீரர்களை சுமார் 467.95 கோடி ரூபாய்க்கு வாங்கினர். இதில், அதிகபட்சமாக ரிஷப் பன்டை, லக்னோ அணி கிட்டத்தட்ட 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
அதே போல், 2ஆம் நாள் ஏலத்திலும் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. மேலும் சில முக்கிய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படாமல் unsold category பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற இளைஞரை ரூ.1.10 கோடி கொடுத்து வாங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் யார் அந்த வைபவ் சூர்யவன்ஷி google ல் தேடி வருகின்றனர். அப்படி யார் அவர் என்ன தான் செய்துள்ளார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
ஐபிஎல் 18ல் அறிமுகமாகும் 13 வயது சிறுவன் – கோடிகளில் வாங்கிய RR அணி – யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷி பிஹாரைச் சேர்ந்தவர். இவருக்கு 12 வயது 284 நாட்களே ஆன நிலையில் , 2023-2024-ல் நடைபெற்ற ரஞ்சி டிராபி கோப்பையில் முதன் முதலாக அறிமுகமாகி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் ரஞ்சி கோப்பை வரலாற்றில் மிகச் சிறிய வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு அவருக்கு?
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் வெறும் 58 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். இப்படி இந்திய அளவில் இளம் வயதில் சர்வதேச போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் தற்போது இளம் வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் குவித்துள்ளார். இதனால் நடக்க இருக்கும் IPL போட்டிகளில் அவருடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்