பயணிகளே குட் நியூஸ்.., மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.., ஆனா.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!பயணிகளே குட் நியூஸ்.., மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.., ஆனா.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணி மோத இருக்கிறது. தோனியின் CSK அணி விளையாட இருப்பதால் ஆரவாரத்திற்கு பஞ்சம் இருக்காது. மேலும் கடந்த 22ம் தேதி நடைபெற்ற போட்டிக்கு CSK ரசிகர்களுக்காக இலவச பேருந்து வசதிகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது. தற்போது இன்று நடக்க இருக்கும் போட்டிக்காக மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதாவது இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு செல்வதற்கு ரசிகர்கள் பரபரப்பாக இருக்கும் பட்சத்தில் கூட்டம் நெரிசலில் சிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே பயணிகள் முன்கூட்டியே பயண சீட்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பயணசீட்டை ஆன்லைனில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஆப், பேடிஎம் ஆப், போன்பே ஆப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் மூலம் வாங்கி கொள்ளலாம். அதுமட்டுமின்றி அரசினர் தோட்டம் – சென்ட்ரல் மெட்ரோ  நிலையங்களில் ரூ.50 செலுத்தி  ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை  பெற்று எந்த மெட்ரோ நிலையத்திலிருந்து பயணிக்கலாம். ஆனால் இன்று இரவு 11.00 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

IPL 2024., இரண்டாவது வெற்றி எந்த அணிக்கு?.., சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *