
IPL 2024 – CSK – RCB
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் நேற்று முதல் தொடங்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அதன்படி நேற்று 2024 IPL ன் முதல் போட்டியாக சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. ஆரம்பத்திலேய அடித்து விளையாடிய டூ பிளசிஸ் 35 ரன்களிலும், கோலி 21 ரன்களிலும் அவுட்டாக, அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை தொடர்ந்து அனுஜ் ராவத் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து கிட்டத்தட்ட 90 ரன்களை குவித்து மொத்தம் 173 ரன்கள் எடுத்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

174 ரன்கள் டார்கெட்டை இலக்காக வைத்து இறங்கிய சென்னை அணி கெய்க்வாட் 15 ரன்களிலும், ரவீந்திரா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த ரஹானே 27 ரன்களிலும், டேரெல் மிச்சேல் 22 ரன்களிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ஷிவம் துபே இறங்கி 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில் சென்னை அணி 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி வாகை சூடியது. இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை பெங்களூர் அணி வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.