IPL 2024 : சன்ரைசர்ஸ் சாதனையை முறியடிக்குமா சென்னை அணி? சொந்த மண்ணில் SRH-க்கு 4வது வெற்றி கிடைக்குமா?IPL 2024 : சன்ரைசர்ஸ் சாதனையை முறியடிக்குமா சென்னை அணி? சொந்த மண்ணில் SRH-க்கு 4வது வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் சீசனில் இன்றைக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத இருக்கின்றனர்.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மாற்று ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. இன்று நான்காவது போட்டியாக சன்ரைஸ் அணியுடன் இன்று மோத இருக்கிறது. சன்ரைஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது சொந்த மண்ணில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி கடந்த போட்டியில் 277 ரன்கள் அடித்து IPL வரலாற்றில் ஆர்சிபி வைத்திருந்த அதிகபட்ச ரன்கள் சாதனையை முறியடித்தது.

மேலும் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானம் பேட்டிங் சப்போர்ட் கொடுக்கும் மைதானம் என்பதால் 200 ரன்களுக்கு மேலாக தான் டார்கெட் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு அணிகளிலும் அதிரடியாக விளையாட கூடிய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் கண்டிப்பாக போட்டி படு சுவாரஸ்யமாக இருக்க போகிறது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இப்போட்டியில் முன்கூட்டியே இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் CSK அணி தான் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர். 

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ படம் – கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *