
TATA IPL போட்டி 2024. கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபில் போட்டிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன் அணி தோல்வியை தழுவியது. மேலும் நேற்று நடந்தது மும்பை அணியின் ஐபில் 2024 க்கான முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
TATA IPL போட்டி 2024
JOIN WHATSAPP TO GET SPORTS NEWS
ஐபில் முதல் போட்டியும், MI அணியும் :
ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013 முதல் தற்போது வரை அனைத்து முதல் போட்டிகளிலும் தோல்வியடைந்து வருகிறது. இந்நிலையில் GT அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. முதலில் பேட்டிங் செய்த GT அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிறகு தொடர்ந்து விக்கெட்களை இழந்து 162 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவினார்.
பெட்டிபெட்டியாக மாட்டிய 6 கோடி தங்கம்…, கொத்தா தூக்கிய தேர்தல் பறக்கும் படையினர்!!
இதன் மூலம் 2013 ஆம் ஆண்டு முதல் 5 கோப்பைகளை வென்ற மும்பை அணி இதுவரை நடந்த அனைத்து முதல் போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.