IPL: ஐபிஎல் 2024ல் மோசமான சாதனை படைத்த மும்பை அணி: கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நடப்பாண்டு ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு KKR அணி சென்றுள்ளது. இதையடுத்து RR மற்றும் SRH அணிகள் அடுத்தடுத்து சென்றுள்ளது. இப்பொழுது நான்காவது அணியாக எந்த அணி பிளே ஆப்-குள் செல்ல போகிறது என்பதை நாளை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க போகும் போட்டியை வைத்து தான் முடிவு செய்ய முடியும். எனவே நாளை CSK மற்றும் RCB அணிகள் வாழ்வா? சாவா? என்ற முனைப்புடன் விளையாட இருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்படி இருக்கையில் IPL போட்டியில் இருந்து முதலாவதாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்(MI) அணி தற்போது மோசமான சாதனையை படைத்துள்ளது. அதாவது நடப்பாண்டு IPL சீசனில் 14 போட்டிகள் விளையாடிய மும்பை அணி வெறும் 4 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள 10 போட்டிகளில் மண்ணை கவ்வியது. இதனால் புள்ளி பட்டியலில் 10 வது இடத்தை பிடித்துள்ளது. இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2022ம் ஆண்டு இதே போல் மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டு முறை கடைசி இடத்தை பிடித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். T20 cricket news – ipl 2024 news – Mumbai team worst record in 2024
கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் – மருத்துவர் சஸ்பெண்ட்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024?
தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான்
கோவாக்சின் போட்டவர்களுக்கு பக்க விளைவு
இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது