அடுத்த ஆண்டு 2025 ல் நடக்க இருக்கும் IPL(ஐபிஎல்) போட்டியில் வீரர்களைத் தக்கவைப்பதில் சிக்கல் இருக்கும் விதமாக பிசிசிஐ முக்கிய கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL ஐபிஎல் 2025ல் பிசிசிஐ
தற்போது இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது, இதன் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது IPL மேட்சுக்கு தான்.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் IPL -யில் மெகா ஏலம் நடைபெற இருப்பதால், ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்க பிசிசிஐ அனுமதி அளிக்கப் போகிறது என்ற கேள்வி தான் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Also Read: உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை – நிர்வாகம் அதிரடி முடிவு!
அதாவது, ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கூறி ஒரு நிபந்தனையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது வேறு ஒன்றும் இல்லை, RTM எனும் விதி இருக்காது எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு அணியின் 3 இந்திய வீரர்களையும், இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தக்க வைக்க வேண்டும் என்று கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நிறைய அணிகள் தங்கல் ஸ்டார் வீரர்களை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி
பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை