Home » செய்திகள் » IPL18 : KKR vs RCB முதல் போட்டி? ஈடன் கார்டனில் வெற்றி வாகை சூடுவாரா கிங் கோலி!!

IPL18 : KKR vs RCB முதல் போட்டி? ஈடன் கார்டனில் வெற்றி வாகை சூடுவாரா கிங் கோலி!!

ipl 2025 kkr vs rcb live win probability

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்த ஆண்டு IPL இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறவுள்ளது.

IPL18 : KKR vs RCB முதல் போட்டி? ஈடன் கார்டனில் வெற்றி வாகை சூடுவாரா கிங் கோலி!!

2015ஆம் ஆண்டுக்கு பிறகு, ஐபிஎல் துவக்க போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அணிகளும் விளையாடியது என்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டி போடுவது போல. அந்த அளவுக்கு போட்டியாளர்களுக்குள் சண்டைகள் தாண்டவம் ஆடும். IPL வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரான 49 ரன்களை RCB அணி KKR அணிக்கு எதிராக விளையாடியது.

கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஓப்பனராக இறங்கி அதிரடி காட்டி வந்தார். ஆனால் அவர் முதலில் பவுலிங்கில் மாஸ் காட்டியது போல், தற்போது பேட்டிங்கில் காட்டி வருகிறார். மேலும் கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் KKR அணி 50% போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

எனவே இன்று KKR சதவீதத்தை உயர்த்தும் வகையில் வெறித்தனமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. KKR அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனாலேயே ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அங்கு மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த தடைகளை மீறி கோலி அணி RCB வெற்றி பெற வேண்டும் என்றால் டாஸ் வென்று முதலில் பௌலிங்கை தேர்வு செய்ய வேண்டும்.

Also Read: சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள போகும் விளைவுகள்.., அடக்கடவுளே இது வேறயா!!!

ஏனென்றால், RCB அணியில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், க்ருனால் பாண்டியா, யாஷ் தயாள் உள்ளிட்ட அனுபவமிக்க பௌலர்கள் இருக்கிறார்கள். அவர்களால் KKR பேட்ஸ்மேன்களை கண்ட்ரோல் செய்ய முடியும். முதலில் இறங்கும் சுனில் நரைன் குறைந்த ஓவர்களில் விக்கெட் எடுத்தால் RCBக்கு ரன்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு, RCB அணிக்கு எதிராக KKR அணி, கிட்டத்தட்ட 7 முறை விளையாடி உள்ளது. அதில் 6 முறை KKR தான் வெற்றி வாகை சூடியுள்ளது. இதனால் இன்று RCB தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளது. பொறுத்து இருந்து பார்க்கலாம் இன்றைய ஆட்டம் யார் பக்கம் சாதகமாக உள்ளது என்று.

ஆர்சிபி 11s அணி: ராஜத் படிதர் தலைமையில் பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், லியம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.

கேகேஆர் 11s அணி: அஜிங்கிய ரஹானே தலைமையில் சுனில் நரைன், குவின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், அங்கிரிஸ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபப் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

Join WhatsApp – Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top