IPL Final 2024 Winner கொல்கத்தா. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி நடந்தது. டாஸ் வென்ற கமின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஹைதராபாத் 118 ரண்களுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் அணிக்கு முதலில் அதிர்ச்சி காத்திருந்தது. அபிஷேக் ஷர்மா இரண்டு ரன்னில் ஸ்டார்க் பந்தில் விழுந்தார். அதிரடி நாயகன் ஹெட் டக் அவுட் ஆனார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது.
IPL FINAL 2024 | SRH VS KKR |
WINNER | KKR (KOLKATA) |
DATE | 26.05.2024 |
PLACE | CHENNAI |
IPL Final 2024 Winner கொல்கத்தா
இந்த நிலையை கேப்டன் கம்மின்ஸ் தனது அதிரடி ஆட்டத்தால் நூறு ரன்களை கடக்க உதவினார். இறுதியில் 18.3 ஓவர்களை சந்தித்த அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கொல்கட்டா அணியின் மிச்சல் ஸ்டார்க் 3 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட் வீழ்த்தினார். ஆண்ட்ரூ ரசல் 2.3 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட் வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி இரண்டு ஓவர் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார். கொல்கத்தா அணியில் பவுலிங் செய்த அனைத்து பவுலர்களும் விக்கெட் வீழ்த்தி இன்று அசத்தினர்.
பின்னர் 114 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இந்த ipl இல் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சுனில் நரேன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் அதிரடியாக ஆடினார். பவர் பிலே முடிவதற்குள் KKR ஆட்டத்தை முழுமையாக டாமினேட் செய்தது. ஆம் முதல் 6 ஓவர் முடிவில் 71 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டும் இழந்து இருந்தது. அப்பொழுதே இது ஒரு உயிரற்ற மேட்ச்சாக மாறி விட்டது.
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள் – T20 உலக கோப்பையை தட்டி தூக்குமா?
குறிப்பாக தமிழக வீரர் நட்டு நடராஜனின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர் . அவர் வீசிய இரண்டு ஓவரில் மட்டும் 29 ரன்கள் அடித்தனர்.7வது ஓவரில் கம்மின்ஸ் சூழல் பந்து வீச்சுக்கு மாற்றி குடுத்தார். ஆனாலும் எந்த பலனும் இல்லை. அந்த ஓவரில் ஒரு 4 மற்றும் 6 ரன்கள் உட்பட பெரிய ஓவராக அமைந்தது. அடுத்து உதன்கட் வீசிய ஓவரில் ஒரு பௌண்டரி உட்பட 9 ரன்கள் கிடைத்தது.
9வது ஓவரில் குர்பாஸ் 39 ரன்களில் LBW மூலம் ஆட்டம் இழந்தார். ஆனாலும் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் போர் அடிக்கப்பட்டது குறிபிடத்தக்கது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெங்கடேஷ் அரை சதம் அடித்தார். அவர் 26 பந்தில் 52 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி
சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற நாய் Doge மரணம்