Home » செய்திகள் » MI Vs SRH: மிரட்டல் அடி அடித்த ஹைதராபாத்.., அபார சாதனையை படைத்த சம்பவம்.., மல்லுக்கட்டிய மும்பை!!

MI Vs SRH: மிரட்டல் அடி அடித்த ஹைதராபாத்.., அபார சாதனையை படைத்த சம்பவம்.., மல்லுக்கட்டிய மும்பை!!

MI Vs SRH: மிரட்டல் அடி அடித்த ஹைதராபாத்.., அபார சாதனையை படைத்த சம்பவம்.., மல்லுக்கட்டிய மும்பை!!

ஹைதராபாத் – மும்பை

ஐபிஎல் 17வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து நேற்று  ஐதராபாத்தில் நடந்த போட்டியில் ஐதராபாத் அணி மற்றும்  மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி  பவுலிங் தேர்தெடுத்து களத்தில் இறங்கியது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், இந்த லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணத்தில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில்  277 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் குவித்தது.  

ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை என்று நிரூபிக்கும் விதமாக இந்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 18 சிக்ஸ் அடித்த நிலையில், அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 சிக்ஸ் அடித்தது. இதற்கு முன்னர் கடந்த 2018ல் நடந்த சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியிலும், 2021ல் சிஎஸ்கே – ஆர் ஆர் அணிகள் மோதிய போட்டியிலும் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்த சாதனையை தற்போது நேற்று நடந்த போட்டியில் மொத்தம் 38 சிக்ஸ்  அடித்து எம்ஐ – எஸ்ஆர்எச் முறியடித்துள்ளது. டி20 போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அதிக ரன்கள் அடித்ததும் இம்முறை தான் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி பெற்றுள்ளது.

தமிழக அரசு பேருந்தில் முதல் பெண் கண்டக்டர்?.., யார் இவர்?.., எப்படி இந்த பெருமையை அடைந்தார் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top