ஐபிஎல் போட்டியால் ரூ.1.5 கோடி கடன்.., கணவனால் 24 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்!!ஐபிஎல் போட்டியால் ரூ.1.5 கோடி கடன்.., கணவனால் 24 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்!!

ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் போட்டி கடந்த 22ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த  ஐபிஎல் போட்டியால் ஒரு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிரிநகரை பகுதியை சேர்ந்தவர் தான் தர்ஷன் பாபு (30). இவருக்கு ரஞ்சிதா (24) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஐபிஎல் கிரிக்கெட் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகம் நாட்டம் காட்டி வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பித்த அவரின் நாட்டம் கடன் வாங்கி விளையாடும் அளவுக்கு சென்றுள்ளது. சொல்ல போனால் ஆரம்பத்தில் தன்னுடைய கை காசை போட்டு விளையாடிய அவர், ரூ.1.5 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி விளையாண்டு தோல்வியுற்றார்.

மனைவி ரஞ்சிதா பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கேட்காமல் இருந்த நிலையில், நாளடைவில் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டு வீட்டு கதவை தட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் தனது நிலத்தை விற்று ரூ.70 லட்சம் கடனை அடைத்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ.84 லட்சத்தை திரும்ப தரக்கோரி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் ரஞ்சிதா, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் அவர் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில் தனது கணவர்  ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்தது, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் போன்றவைகளால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று எழுதியுள்ளார். இதனை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

விவசாயி சின்னத்தை கைவிட்ட நாம் தமிழர் கட்சி.., இனி இது தான் சின்னம்?.., சீமான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *