RCB கேப்டன் விராட் கோலி
கிரிக்கெட்டில் மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியான IPL தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், விராட் கோலி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த முறையாவது கோலி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் முதல் இந்திய வீரர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். CSK முன்னாள் வீரர் ரெய்னாவும் இந்த வட்டம் கோலி கப் அடிக்க வேண்டும் என்று அதற்கான முழு வீச்சில் அவர் இருக்கிறார் என்று கூறியிருந்தார். இப்படி இருக்கையில் ஒரு வீரர் விராட் கோலி IPLல் விளையாடுவது குறித்து அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ராஞ்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாட இருப்பதால் அவரால் ரன் குவிப்பதில் தீவிரம் காட்டுவாரா? என ஐஐடி மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கோலி சில காரணங்களுக்காக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா? அல்லது விளையாடாமல் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.