IPL போட்டியில் தொடரும் அதிசயம்: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா – ஐதராபாத் அணிகளுக்கு இறுதி போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த SRH அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பிறகு களமிறங்கிய KKR அணி வெறும் 10 ஓவர்களில் ஆட்டையை முடித்து IPL 2024 கோப்பையை தட்டி தூக்கியது. இதுவரை 3 முறை கொல்கத்தா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2019ம் ஆண்டு முதல் இப்பொழுது வரை ஒரு அதிசயம் ஒன்று அரங்கேறி வருகிறது. அதாவது கடந்த 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் டாஸ் போடும் போது இடது பக்கத்தில் நிற்கும் அணி தான் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதன்படி,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- 2019 – சென்னை(CSK) – மும்பை(MI) அணிகள் மோதிய போது, ரோகித் சர்மா இடது புறமும் தோனி வலது புறமும் நின்று இருந்தார் . இறுதியில் மும்பை அணி தான் வெற்றி பெற்றது.
- 2020 – மும்பை(MI) – டெல்லி(DD) மோதிய போது, ரோகித் சர்மா இடது புறமாக நின்ற நிலையில் கோப்பையை தட்டி வென்றார்
- 2021 – சென்னை(CSK) – கொல்கத்தா(KKR) மோதிய போது தோனி இடது புறம் நின்றார் கோப்பையை தட்டி வென்றார்.
- 2022 – குஜராத்(GT) – ராஜஸ்தான்(RR) மோதிய போது ஹர்திக் பாண்டியா இடது புறம் நின்றார் கோப்பையை தட்டி வென்றார்.
- 2023 – சென்னை(CSK) – குஜராத்(GT) மோதிய போது தோனி இடது புறம் நின்றார் கோப்பையை தட்டி வென்றார்.
- அதே போல் நேற்று நடந்த கொல்கத்தா(KKR) – ஐதராபாத்(SRH) மோதிய போது சுரேஷ் ஐயர் இடது புறம் நின்றார் கோப்பையை தட்டி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ipl 2024 points table 2024 Indian Premier League
சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம் – போலீஸ் விசாரணை தீவிரம்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்
கொடைக்கானல் வனப்பகுதியில் சிக்கிய சுற்றுலா பயணிகள்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம்