ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடத்தி வரும் சூழ்நிலையில் இதன் விளைவாக பங்குச் சந்தையிலும் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் விவகாரம்
கடந்த சில நாட்களாக ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதாவது, கடந்த 1ம் தேதி ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. அதுமட்டுமின்றி இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை நடத்தியது. குறிப்பாக ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஈரான் ஏவியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த போரினால் வாரம் இரண்டு நாடுகளுக்கு இடையேயான அரசியல் முன்னேற்றங்களை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால் சந்தையில் அதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் சந்தையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் பீதியில் இருந்து வருகின்றனர்.