பிரபல பாடகருக்கு சிறை தண்டனை
ஈரான் பகுதியில் பொதுவாக பெண்கள் ஹிஜாப் அணிவது அவசியம் என்ற சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஹிஜாப் அணியாமல் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாஷா அமினி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் போலீசார் அவரை கைது செய்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அங்கு அந்த பெண்ணை போலீஸ் அடித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அப்போது பெரிய போராட்டம் வெடித்தது. இதனை தொடர்ந்து ஈரான் பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் என்பவரின் பாடல் அப்போது வெளியான நிலையில், அது போராட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர் உலகின் உயரிய கிராமிய விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.