பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு.கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் மே மாதம் காசா பகுதியின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்கள் நடத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியனர்.இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முடிவு :
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவிற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் பாலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடாக செயல்பட அனைத்து வகையான அடிப்படை உரிமை உண்டு என தெரிவித்தார். அத்துடன் அயர்லாந்து பிரதமர் சிம்சன் குறிப்பிடுகையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் முடிவு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என தெரிவித்துள்ளார்.
அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் – தமிழக அரசிற்கு 6000 கோடி இழப்பு என தகவல் !
இவ்வாறு அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகளை சார்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இதற்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அயர்லாந்து மற்றும் நார்வே நாடுகளுக்கான தூதர்களை திரும்பப் பெறுவது குறித்து இஸ்ரேல் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.