நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா?  இத தெரிஞ்சுக்கோங்க மக்களே!நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா?  இத தெரிஞ்சுக்கோங்க மக்களே!

நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? பொதுவாக ஒரு நிலத்தை வாங்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக “பட்டா” இருக்கிறதா என்று தான் அதிகம் கேட்பார்கள். ஆனால் பட்டா என்ன என்று சிலர் தெரியாமல் இருந்து வருகின்றனர். பட்டா என்பது ஒரு நிலம் அவர் பெயரில்தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் வருவாய் துறையால் அளிக்கப்படும் ஒரு சான்றிதழ் தான் அது.

நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா?

இன்னும் தெளிவாக சொல்ல போனால் பட்டா என்பது நில உரிமை ஆவணம் என்று கூறப்படுகிறது.

அந்த பட்டாவில் யார் பெயரில் உள்ளதோ, அவரே தற்போதைய நில உரிமையாளர் ஆவார்.

மேலும் அந்த ஆவணத்தில்  மாநிலம், கிராமம், வட்டம், மாவட்டம்,  இடத்தின் விஸ்திரம்,  நிலத்தின் சர்வே எண், விரித்தொகை எவ்வளவு,

என்ன வகையான நிலம்,உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தையின் பெயர் ஆகியவை அடங்கியிருக்கும்.

அதே போல பத்திரமம் நிலம் வாங்கும் போது கட்டாயமாக தேவைப்படுகிறது. அதாவது பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம் இது நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால், சொத்துக்களுக்கான சில உரிமைகளை வைத்திருப்பவருக்கு இந்த ஆவணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆவணத்தை வருவாய்த்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக நிலம் மற்றுமின்றி சொத்து அல்லது வாகனத்தின் உரிமையை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கு தான் இந்த பத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா?

எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய பரிதாபம்!

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழும். ஒரு நிலத்தின் பட்டா ஒருவர் பெயரிலும், பத்திரம் ஒரு பெயரிலும் இருந்தால் அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழும். இதற்கு சரியான தீர்வு என்ன என்று பலரும் கேட்டு வருகிறீர்கள். பட்டா முக்கியமா அல்லது பத்திரம் முக்கியமா என்ற கேள்விக்கு பத்திரம் தான் முக்கியம் என்று ஒரு முறை உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஏனென்றால் பட்டா ஆவணம் பெறுவதற்கு முக்கியமாக பத்திரம் தேவை படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *