பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை… சூடுபிடிக்க வாதாடிய எக்கோ நிறுவனம்!பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை… சூடுபிடிக்க வாதாடிய எக்கோ நிறுவனம்!

பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை: தமிழ் சினிமா வில் இசைக்கு பெயர்போனவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை 4500 பாடல்களை இசையமைத்துள்ளார். இதில் பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளது. அதன்முலம் இவருக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரைக் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும் அவருடைய பாடல்களை முன் அனுமதி வாங்காமல் படங்களில் பயன்படுத்தி வரும் இயக்குனர்கள் மீது வழக்கு தொடர்ந்து வந்தார்.

சமீபத்தில் கூட அனிருத் மீது  “கூலி” படத்தின் டீசர்க்காக போட்ட இசையில் தன்னுடைய பாடல் இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் எக்கோ நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வாதாடிய போது,  இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என்றும், அவருக்கு சம்பளம் கொடுத்து தான் இசையமைக்க சொல்கிறார்கள். எனவே இசை சேவையை பெறும் உரிமை தயாரிப்பாளர்களுக்கு தான் இருக்கிறது. அதனால் இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும்தான் தார்மீக உரிமை வரும் என்று எக்கோ நிறுவனம் வாதாடியது. மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளி வைத்தது. tamil cinema – kollywood cinema news – music director

17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்… கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் பிடிவாரண்ட்… நீதிமன்றம் உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *