ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல். தற்போது சிவராத்திரி நெருங்கி வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உலகளவில் இருந்து பல்வேறு முக்கிய நபர்கள் பங்கேற்பதால் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் :
சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் போது ஈஷா மையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கலக்கிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் சிவராத்திரி நிகழ்ச்சியின் போது ஈஷா மையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கலப்பதாக சிவஞானம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
காதும் காதும் வச்சமாதிரி அதிமுகவுடன் கூட்டணி ! அடுத்தடுத்து விழும் விக்கெட் – மகிழ்ச்சியில் இபிஎஸ் !
இந்த வழக்கில் ஈஷா மையம், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.