இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண்: சமீப காலமாக இஸ்ரேல் பல்வேறு நாடுகள் மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் குழந்தை மற்றும் பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில், நேற்று இரவு காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பலியானவர்களில் கர்ப்பிணியும் ஒருவர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்த அவர் தாக்குதலின் போது உயிரிழந்தார். ஆனால் அவர் வயிற்றில் குழந்தை உயிரோடு இருப்பதை தெரிந்து கொண்ட மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண் குழந்தையை வெளியே எடுத்து இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறார்கள். அக்குழந்தையின் எடை 1.4 கிலோ என்றும் அக்குழந்தை தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பார்த்து வருகின்றனர். மேலும் குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.