
Breaking News: இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண்: பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் உயிரிழந்து விட்டனர். இருப்பினும் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலின் போது, கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண்
இதனை தொடர்ந்து வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டுக் கொண்ட நிலையில், மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். doctors hospital
இதையடுத்து குழந்தையை அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர். ஆனால் அக்குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது. அதன்பின்னர் மருத்துவர்கள் அக்குழந்தைக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனை அடுத்து அந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தனர். baby
Also Read: பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் – நடப்பாண்டு நிதியாண்டில் ஜிடிபி 6.5 – 7% ஆக உயரும்!!
இப்படி கர்ப்பிணி பெண் உயிரிழந்த போதிலும், வயிற்றில் இருந்த குழந்தையை உயிருடன் காப்பாற்றி மருத்துவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கர்ப்பிணி குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்ததாகவும் மொத்தம் 24 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. pregnant woman
RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்
கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை