இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ(ISRO) என்பது கடந்த 1969 இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ஆகும். பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு விளங்கி வரும் இந்த நிறுவனம் வான்வெளியில் உள்ளதை கண்டுபிடிக்க பல ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறது. எனவே இந்த நிறுவனத்தின் 10 வது தலைவராக சோம்நாத் கடந்த 2022 ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பதவியேற்றார்.
ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?
இதனை தொடர்ந்து அவருடைய பதவி காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் , இஸ்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் என்பவரை மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. மேலும் இவர் திருவனந்தபுரத்தில் வலியமலாவில் இருக்கும் எல்.பி.எஸ்.சி.யின் இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 பிப்ரவரி 5ல் நடைபெறும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அதுமட்டுமின்றி பிஎஸ்எல்வி சி 57, ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்.கே 3, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட திட்டங்களில் அவர் முக்கிய பங்காற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 11 வது தலைவராக வி. நாராயணன் வருகிற ஜனவரி 14ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். மேலும் நாராயணன் விண்வெளித் துறையில் அவர் ஆற்றிய பணியை பாராட்டி, இஸ்ரோவின் உயரிய பொறுப்பான “Distinguished Scientist” பொறுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்று குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.01.2025)! மாவட்ட வாரியாக Power Cut News!
திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!