விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ சார்பில் விண்வெளியில் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு செயற்கை கோள்களை வானில் பறக்கவிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் 30ம் தேதி ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி உள்ளிட்ட இரண்டு விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஏவப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி 7ம் தேதி டாக்கிங் செயல்முறை நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்தது.
இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!
ஆனால் சில காரணங்களால் டாக்கிங் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், இஸ்ரோ முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!
அதாவது, விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் சேர்க்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது. எனவே இப்படி இரண்டு விண்கலன்களை சேர்க்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா தற்போது பெற்றுள்ளது. எனவே இந்த வெற்றியின் மூலம், இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!
நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!