Home » செய்திகள் » ITI Admission 2024: ஐடிஐ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – எப்படி தெரியுமா?

ITI Admission 2024: ஐடிஐ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – எப்படி தெரியுமா?

ITI Admission 2024: ஐடிஐ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி தெரியுமா?

ITI Admission 2024: ஐடிஐ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி பெரும்பாலான மாணவர்கள் 11ம் வகுப்பு admission போட்டு கொண்டிருக்கும் நிலையில், சிலர் ITI படிப்பில் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படிப்பில் சேருவதற்கு 8ம் வகுப்போ அல்லது 10 வகுப்போ படித்திருந்தால் போதுமானது. இந்த படிப்பின் மூலம் மாணவர்கள் சிறு தொழில்களை கற்று கொள்வார்கள். அதன்படி மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தின் அங்கீகாரத்தின் கீழ் பல்வேறு தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இதன் மூலம் மாணவர்களுக்கு ஆறு மாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டு கால அளவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த படிப்பில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) வழங்கப்படும். இந்நிலையில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ITI சேர மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம். மாணவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 7ம் தேதி ஆகும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 9499055689 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். 

TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – அரியலூர் மாவட்டம்  முதலிடம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top