சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவ வழக்கு: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது முதனை கிராமம். அங்கு குரும்பர் எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 1993ம் ஆண்டு நெல் அறுவடை பணிக்காக வெளியூர் சென்ற போது கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் 40 சவரன் நகை காணாமல் போனது. இது தொடர்பாக முதனை கிராமத்தை சேர்த்தவர்களை விசாரித்து வந்த போது, ராஜா கண்ணு தான் இதை செய்தார் என்று கூறி, அவருடைய வீட்டில் இருந்த மனைவி , உறவினர்களை கைது செய்து நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்தனர். அதன்பின்னர் ராஜா கண்ணுவை கைது செய்து அவர்களை ரிலீஸ் செய்தது. அப்போது அவரை போலீஸ் கடுமையாக தாக்கியுள்ளது ஒரு கட்டத்தில் அவர் இறந்தும் போனார். சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், 3 ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 லட்சத்து 65 ஆயிரம் உதவித் தொகையும், 3 சென்ட் பட்டா நிலம் வழங்க உத்தர விடப்பட்டு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின்பு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்க கோரி ராஜ்கண்ணு வின் உறவினர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்த நிலையில், இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.