தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏதுவாக மைதானம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் சட்டசபையில் கூறிய நிலையில், அதன் படி இன்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். மேலும் இன்று 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை அடுக்குவதற்கு சுமார் 300 வீரர்களை களமிறங்கினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றவர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடம் பிடித்தார். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம், மகேந்திரா ஜீப் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இவர் இதற்கு முன்னால் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.