தமிழகத்தில் இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நடைபெற்று தற்போது நிறைவு பெற்றது. அதில் சுகேந்த் என்ற இளைஞர் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கி பல்சர் பைக்கை பரிசாக தட்டி சென்றார்.
பொங்கல் திருநாளை ஒட்டி தமிழத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல எதிர்ப்புகள் வந்த போதும் தமிழக இளைஞர்கள் அதனை முறியடித்து நமது பாரம்பரிய விளையாட்டை இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை ! 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு !
மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு , அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை. அதே போல் புதுக்கோட்டை தச்சன்குறிச்சியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சன் குறிச்சியில் இன்று ஜனவரி 6 ம் தேதி காலை தொடங்கப்பட்டது.
இந்த போட்டியை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.முதலில் 300 கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதில் பல்வேறு வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டு காளைகளை அடக்கினார். அதில் அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவ படுத்தப்பட்டது.
2024 ன் முதல் ஜல்லிக்கட்டில் மொத்தம் 611 மாடுகளை 250 மாடுபிடி வீரர்கள் தீரமுடன் அடக்கினர். மேலும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று அதிகபட்சமாக 12 காளைகளை சுகேந்த் என்ற இளைஞர் அடக்கினார். அவருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட்டது.