அடுத்த ஆண்டு 2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு முக்கியமான அறிக்கையை வெளியீட்டு உள்ளது.
தமிழக அரசு:
பொங்கல் பண்டிகை வந்தாலே போதும் தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மாட்டு பொங்கல் வந்தால் சொல்லவா வேணும். அந்த நாளில் மாடுகளை பெருமைப்படுத்தும் விதமாக காளைகளை வைத்து ஒவ்வொரு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இந்த போட்டியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தடை விதித்திருந்தது.
2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!
அந்த தடையை நீக்க கூறி, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதன்பிறகே தடை நீக்கப்பட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2025ல் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை எப்படி நடத்த வேண்டும்? என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்ற விதிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
விதிமுறைகள்:
- மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
- போட்டியில் காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். போட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு போட்டியின் போது அந்த நாள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
- மேலும், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு.., உங்க ஏரியா இருக்கா?
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் அடுத்தபடியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை.., இந்திய அணி பட்டியல் வெளியீடு!!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!