குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வாழும் பெண்களுக்காக தொடர்ந்து புதுப்புது திட்டங்களை அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பெண்களுக்கு சூப்பர் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை
அதாவது, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கிறது. தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அனந்த்நாக் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். அதில் அவர் கூறியதாவது, ” ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும். அதுமட்டுமின்றி ஒரு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்படும்.
Also Read: மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி – சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேலும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கு 11 கிலோ அரிசி வழங்கப்படும். இன்னும் ஸ்பெஷலாக ரூ. 25 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்