ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் - அறிவிப்பு வெளியீடு !ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் - அறிவிப்பு வெளியீடு !

தற்போது ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியில் வெளியிட்ட முந்தைய உத்தரவு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது.

இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அதன் பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சட்ட மன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க உள்ளது.

இதனை தொடர்ந்து பாஜக 29 தொகுதிகளிலும், அத்துடன் மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. Jammu and Kashmir President Rule Withdrawal Announcement

அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை வழங்கிய ஒமர் அப்துல்லா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் காரணமாக விரைவில் புதிய முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க உள்ளார்.

பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !

இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியில் வெளியிட்ட முந்தைய உத்தரவு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆண்டுகாலமாக செயல்பாட்டில் இருந்த உத்தரவை ரத்துசெய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *